டிசம்பர் | தினசரி தியானம்
6 videos
Updated 1 month ago
மானுட அமைப்பில் உடலினும் உயர்ந்தது உள்ளம். உடலில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை முன்னிட்டு மனிதன் கீழோனாகக் கருதப்படமாட்டான். ஆனால் மனத்தில் நேர்மையும் ஒழுக்கமும் நல்லறிவும் அமையப் பெறாதிருக்குமளவு அவன் புன்மையன் ஆவான். மனத்தை மாண்புறச் செய்யுமளவு மனிதன் மேலோன் ஆகிறான். உணவு ஊட்டி உடலை வளர்க்கிறோம். அப்படி உடலைப் பேணுவது உயிர்கள் அனைத்துக்கும் பொதுவானது. பின்பு உள்ளத்தைப் பேணுவது மனிதனுடைய தனிச்செயல் ஆகிறது. நல்லுணவையே உடலுக்குத் தரவேண்டும்; உணவு வெவ்வேறு வகைப்பட்டதாக இருக்கவேண்டும். விதவிதமான உணவு நாவுக்கு இனியதும் உடலுக்கு உறுதி தருவதும் ஆகும். நல்லெண்ணமும் நல்லுணர்வும் உள்ளத்துக்கு உணவு ஆகின்றன. எத்தனைவிதமான நல்லெண்ணங்களை எண்ணுகின்றோமோ அத்தனை விதங்களில் உள்ளம் உறுதிபெறும், மனத்துக்கு இனிய நல்லுணவு ஆவது "தினசரிதியானம்". அன்றாடம் வழிபாட்டுக்குப் பிறகு ஓர் எண்ணத்தை இதனின்று பெறலாம். பிறகு அதைப்பற்றிச் சிந்தனை பண்ணுவது அவசியம். சிந்திக்குமளவு அந்த மூலக்கருத்தில் வெவ்வேறு கிளை எண்ணங்களும் உள்ளத்தில் உதிக்கும். உள்ளத்தினுள் பக்தியையும் ஞானத்தையும் வளர்ப்பதற்கு இது உற்றதோர் உபாயம். தேதியை ஆங்கில முறையில் அல்லது தமிழ் முறையில் அவரவர் விருப்பம்போல் பின்பற்றலாம். சில வருடங்களில் ஆங்கிலத் தேதியும் தமிழ்த்தேதியும் ஒத்திருக்கும்; வேறு சில வருடங்களில் ஒருநாள் முன்னது பின்னதாக இருக்கும். "தினசரி தியானம்" என்னும் தலைப்புக் கொடுத்து இயற்றியுள்ள இந்நூலில் அடங்கி இருக்கிற கருத்துக்கள் ஆத்ம சாதனத்துக்கு நன்கு உதவும் என்பது சொல்லாமலே விளங்கும். திருப்பராய்த்துறை 20-8-60 சுவாமி சித்பவானந்த. #tamil #devotional #lifetraining #shortstory #thoughtfulness #spirituality #mindandsoul #purityoflife
-
டிசம்பர் 06 | அந்தக்கரணம் | தினசரி தியானம்
தினசரி தியானம்அந்தகரணம் அல்லது மனம் புறவுலகைக் காண உதவுகிறது. கெட்ட மனமுடையவர்க்கு உலகம் கேடுடையதாகத் தெரிகிறது. மனம் நல்லதாக மாறுமளவு உலகும் நல்லதாகத் தோன்றுகிறது. தெய்விக மனத்துக்கு தெய்வக் காட்சியே எங்கும் தென்படுகிறது. மனத்தை தெய்வத்தில் ஒடுக்கிவிட்டால் மனிதன் தெய்வத்தை அடையப்பெறுகிறான்.1 view -
டிசம்பர் 05 | அந்தர்யோகம் | தினசரி தியானம்
தினசரி தியானம்காலமெல்லாம் மனிதன் உலக வியவகாரத்தில் மூழ்கியிருப்பது பொருந்தாது. அவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு இடையிடையே அருள் நாட்டம் கொள்ளவேண்டும். அப்படிச் செய்தால் அவன் பிறவிப் பெருங்கடலில் மூழ்கிப்போய்விடமாட்டான்.2 views -
டிசம்பர் 04 | நிலை | தினசரி தியானம்
தினசரி தியானம்ஒவ்வொரு பொருளுக்கும் உற்ற நிலையுண்டு. தனது நிலையை அடையும் வரையில் எப்பொருளுக்கும் ஓய்வு இல்லை. நீரானது கடலைப்போய் அடையும் வரையில் அதற்கு நிலை தடுமாற்றமே நிகழ்கிறது. மனிதன் தெய்வத்தை அடையும் வரையில் அவன் நிலை தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருக்கிறான்.5 views -
டிசம்பர் 03 | கலை | தினசரி தியானம்
தினசரி தியானம்கலைஞானங்கள் யாவும் உலகத்தில் உள்ள அதிசயங்களை விளக்குகின்றன. ஒவ்வொரு கலையும் கடைசியில் கடவுள்தான் இவ்வுலகாகத் தோன்றிக் கொண்டிருக்கிறார் என்னும் உண்மையை வெளிப்படுத்துகிறது. எனவே கற்கவேண்டிய முறையில் கலையைக் கற்றால் மெய்ப்பொருளை அடைதற்கு அது உபாயமாகும்.2 views -
டிசம்பர் 02 | பித்தன் | தினசரி தியானம்
தினசரி தியானம்பரம்பொருளுக்கு அமைந்துள்ள பல பெயர்களுள் பித்தன் என்பது முற்றிலும் பொருத்தமானது. உயிர்களைத் தனக்கு உரிமையாக்கிக்கொள்ளுதலில் அவன் பெரும் பித்துப் பிடித்திருக்கிறான். இனி அவனை அடையவேண்டும் என்னும் பித்தம் உயிர்களுக்கு வந்துவிட்டால் முன்னேற்றம் மிக எளிதாகிவிடுகிறது. -
டிசம்பர் 01 | எட்டுக் கல்வி | தினசரி தியானம்
தினசரி தியானம்வெளியூரில் இருக்கும் புதல்வன் ஒருவனுக்கு அவனுடைய பெற்றோரிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது. அதைப் படித்துக்கொண்டிருக்கும்போது பெற்றோரே நேரில் வந்து விட்டனர். உடனே மகன் கடிதத்தை ஒருபுறம் வைத்துவிட்டுத் தாய் தந்தையருடன் பேச ஆரம்பித்தான். அதேவிதத்தில் ஏட்டுக் கல்வி கடவுளின் அருளைப் பெறும்வரையில்தான் பயன்படுகிறது.2 views