
ஆகஸ்ட் | தினசரி தியானம்
31 videos
Updated 28 days ago
மானுட அமைப்பில் உடலினும் உயர்ந்தது உள்ளம். உடலில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை முன்னிட்டு மனிதன் கீழோனாகக் கருதப்படமாட்டான். ஆனால் மனத்தில் நேர்மையும் ஒழுக்கமும் நல்லறிவும் அமையப் பெறாதிருக்குமளவு அவன் புன்மையன் ஆவான். மனத்தை மாண்புறச் செய்யுமளவு மனிதன் மேலோன் ஆகிறான். உணவு ஊட்டி உடலை வளர்க்கிறோம். அப்படி உடலைப் பேணுவது உயிர்கள் அனைத்துக்கும் பொதுவானது. பின்பு உள்ளத்தைப் பேணுவது மனிதனுடைய தனிச்செயல் ஆகிறது. நல்லுணவையே உடலுக்குத் தரவேண்டும்; உணவு வெவ்வேறு வகைப்பட்டதாக இருக்கவேண்டும். விதவிதமான உணவு நாவுக்கு இனியதும் உடலுக்கு உறுதி தருவதும் ஆகும். நல்லெண்ணமும் நல்லுணர்வும் உள்ளத்துக்கு உணவு ஆகின்றன. எத்தனைவிதமான நல்லெண்ணங்களை எண்ணுகின்றோமோ அத்தனை விதங்களில் உள்ளம் உறுதிபெறும், மனத்துக்கு இனிய நல்லுணவு ஆவது "தினசரிதியானம்". அன்றாடம் வழிபாட்டுக்குப் பிறகு ஓர் எண்ணத்தை இதனின்று பெறலாம். பிறகு அதைப்பற்றிச் சிந்தனை பண்ணுவது அவசியம். சிந்திக்குமளவு அந்த மூலக்கருத்தில் வெவ்வேறு கிளை எண்ணங்களும் உள்ளத்தில் உதிக்கும். உள்ளத்தினுள் பக்தியையும் ஞானத்தையும் வளர்ப்பதற்கு இது உற்றதோர் உபாயம். தேதியை ஆங்கில முறையில் அல்லது தமிழ் முறையில் அவரவர் விருப்பம்போல் பின்பற்றலாம். சில வருடங்களில் ஆங்கிலத் தேதியும் தமிழ்த்தேதியும் ஒத்திருக்கும்; வேறு சில வருடங்களில் ஒருநாள் முன்னது பின்னதாக இருக்கும். "தினசரி தியானம்" என்னும் தலைப்புக் கொடுத்து இயற்றியுள்ள இந்நூலில் அடங்கி இருக்கிற கருத்துக்கள் ஆத்ம சாதனத்துக்கு நன்கு உதவும் என்பது சொல்லாமலே விளங்கும்.
திருப்பராய்த்துறை
20-8-60
சுவாமி சித்பவானந்த.
-
ஆகஸ்ட் 31 | அறுவடை | தினசரி தியானம்
தினசரி தியானம்நல்ல விதை விதைத்தவனுக்கு நல்ல அறுவடை; கெட்ட விதை விதைத்தவனுக்கு அதற்கேற்ற அறுவடை. எத்தகைய வினையை ஒருவன் விதைக்கிறானோ அத்தகைய அறுவடை அவனுக்குரியது. பெருவாழ்வு என்னும் விதை விதைப்பவன் பேராளன் ஆகிறான்.2 views -
ஆகஸ்ட் 30 | தந்திரம் | தினசரி தியானம்
தினசரி தியானம்ஒவ்வொரு யந்திரத்தையும் முறையாகக் கையாளுதற்கு உற்ற உபாயம் உண்டு. அந்த உபாயத்துக்குத் தந்திரம் என்று பெயர். உடல் என்னும் யந்திரத்தை இறைவன் பொருட்டுக் கையாளுதலே நல்ல தந்திரமாகும்.1 view -
ஆகஸ்ட் 29 | பாதுகாப்பு | தினசரி தியானம்
தினசரி தியானம்செல்வமும் செல்வாக்கும் நமக்கு நல்ல பாதுகாப்பு ஆகமாட்டா. அவை நொடிப்பொழுதில் அழிந்துபோம். ஓடும் நதிக்கு அதன் உற்பத்தி ஸ்தானம் உயிர் ஊட்டுகிறது. தெய்வத்திடமிருந்து ஓயாது வரும் பேரியல்பே நமக்கு நல்ல பாதுகாப்பு ஆகிறது.3 views -
ஆகஸ்ட் 28 | கருமம் | தினசரி தியானம்
தினசரி தியானம்சினிமாப்படம் என்பது நிழல், வெளிச்சம் ஆகியவைகளின் அசைவு. அந்த அசைவு ஓய்ந்தால் திரை தென்படும். இயற்கையின் கருமம் என்பது சத்துவம், ரஜஸ், தமஸ் ஆகியவைகளின் அசைவு. அந்த அசைவு ஓய்ந்தால் இறைவன் தென்படுவார்.2 views -
ஆகஸ்ட் 27 | உடம்பு | தினசரி தியானம்
தினசரி தியானம்உயிரை விளக்குதற்கென்றே உடல் இருக்கிறது. உயிர் இல்லாவிட்டால் உடல் பிணமாய் விடும். பின்பு, உடம்பினைப் பண்படுத்துமளவு அதனுள் உயிரானது ஓங்கி மிளிரும்.1 view -
ஆகஸ்ட் 26 | மருந்து | தினசரி தியானம்
தினசரி தியானம்நோயின் வேகத்தைத் தடுக்கவல்லது மருந்து. பிறகு, நோயைப் போக்கவல்லதும் மருந்து. பண்பட்ட மனமே மருந்துகளுள் மேலானது. அந்த மனத்தைத் தெய்வத்துக்கு உரியதாக்கிவிட்டால் மனிதன் கேடில்லாதவனாகி விடுகிறான்.1 view -
ஆகஸ்ட் 25 | ஏழைத் தெய்வம் | தினசரி தியானம்
தினசரி தியானம்இறைவனே உலகனைத்துமாயுள்ளார். அவருடைய வடிவங்களையெல்லாம் பாவித்துப் போற்றுவது இயலாத காரியம். ஏழை எளியவன் வடிவத்தில் நம்மைத் தேடி வந்துள்ள அவரைத் திருப்திப்படுத்தினால் அது அவருக்குகந்த நல்ல ஆராதனையாகிறது.3 views -
ஆகஸ்ட் 24 | காலி செய் | தினசரி தியானம்
தினசரி தியானம்மனத்தில் இருக்கும் விதவிதமான எண்ணங்களையெல்லாம் அப்புறப்படுத்திவிடவேண்டும். அப்பொழுது அதனூடு இலகும் பேருயிரும், ஆற்றலும், சுதந்திரமும், ஆனந்தமும் ஒன்றுகூடி வாழ்வைப் பெருவாழ்வாகப் பெருக்கிவிடும்.1 view -
ஆகஸ்ட் 23 | தரித்திரம் | தினசரி தியானம்
தினசரி தியானம்பிரபஞ்சத்திலுள்ள பொருள்கள் மனிதனுக்கு நிரந்தரமான திருப்தியளிக்கமாட்டா. ஒரு பொருளைப் பெறும்பொழுதே அது போதவில்லையென்ற அதிருப்தியும் சேர்ந்தே வருகிறது. போதவில்லை என்னும் மனக்குறைவுக்குத் தரித்திரம் என்று பெயர்.1 view -
ஆகஸ்ட் 22 | அருள் வேட்கை | தினசரி தியானம்
தினசரி தியானம்ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒருவித வேட்கையிருக்கிறது. அதன் பொருட்டு அவன் முயற்சி மிக எடுத்துக் கொள்கிறான். வேட்கைகளுள் எல்லாம் கடவுளுக்காகவென்று உண்டாகும் வேட் கையே ஒப்பு உயர்வு அற்றது.