
செப்டம்பர் | தினசரி தியானம்
23 videos
Updated 23 hours ago
மானுட அமைப்பில் உடலினும் உயர்ந்தது உள்ளம். உடலில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை முன்னிட்டு மனிதன் கீழோனாகக் கருதப்படமாட்டான். ஆனால் மனத்தில் நேர்மையும் ஒழுக்கமும் நல்லறிவும் அமையப் பெறாதிருக்குமளவு அவன் புன்மையன் ஆவான். மனத்தை மாண்புறச் செய்யுமளவு மனிதன் மேலோன் ஆகிறான்.
உணவு ஊட்டி உடலை வளர்க்கிறோம். அப்படி உடலைப் பேணுவது உயிர்கள் அனைத்துக்கும் பொதுவானது. பின்பு உள்ளத்தைப் பேணுவது மனிதனுடைய தனிச்செயல் ஆகிறது. நல்லுணவையே உடலுக்குத் தரவேண்டும்; உணவு வெவ்வேறு வகைப்பட்டதாக இருக்கவேண்டும். விதவிதமான உணவு நாவுக்கு இனியதும் உடலுக்கு உறுதி தருவதும் ஆகும். நல்லெண்ணமும் நல்லுணர்வும் உள்ளத்துக்கு உணவு ஆகின்றன. எத்தனைவிதமான நல்லெண்ணங்களை எண்ணுகின்றோமோ அத்தனை விதங்களில் உள்ளம் உறுதிபெறும், மனத்துக்கு இனிய நல்லுணவு ஆவது "தினசரிதியானம்". அன்றாடம் வழிபாட்டுக்குப் பிறகு ஓர் எண்ணத்தை இதனின்று பெறலாம். பிறகு அதைப்பற்றிச் சிந்தனை பண்ணுவது அவசியம். சிந்திக்குமளவு அந்த மூலக்கருத்தில் வெவ்வேறு கிளை எண்ணங்களும் உள்ளத்தில் உதிக்கும். உள்ளத்தினுள் பக்தியையும் ஞானத்தையும் வளர்ப்பதற்கு இது உற்றதோர் உபாயம்.
தேதியை ஆங்கில முறையில் அல்லது தமிழ் முறையில் அவரவர் விருப்பம்போல் பின்பற்றலாம். சில வருடங்களில் ஆங்கிலத் தேதியும் தமிழ்த்தேதியும் ஒத்திருக்கும்; வேறு சில வருடங்களில் ஒருநாள் முன்னது பின்னதாக இருக்கும். "தினசரி தியானம்" என்னும் தலைப்புக் கொடுத்து இயற்றியுள்ள இந்நூலில் அடங்கி இருக்கிற கருத்துக்கள் ஆத்ம சாதனத்துக்கு நன்கு உதவும் என்பது சொல்லாமலே விளங்கும்.
திருப்பராய்த்துறை 20-8-60
சுவாமி சித்பவானந்த.
#tamil #devotional #lifetraining #shortstory #thoughtfulness #spirituality #mindandsoul #purityoflife
-
செப்டம்பர் 23 | நைவேத்தியம் | தினசரி தியானம்
தினசரி தியானம்தெய்விகப் பேரியல்பு மனிதனிடத்து மறைந்திருக்கிறது. அதை ஞாபகமூட்டுதற்கான வாழ்வே நல்வாழ்வு ஆகிறது. பிறரோடு மனிதன் செய்கிற இணக்கம் அவர்களிடத்துள்ள பேரியல்பை முன்னணிக்குக் கொண்டு வருவதாயிருக்க வேண்டும். அதை வளர்ப்பதற்கான சொற்களும் செயல்களுமே மேலான சொற்களும் செயல்களும் ஆகின்றன.1 view -
செப்டம்பர் 22 | மேகமண்டலத்துக்கு மேல் | தினசரி தியானம்
தினசரி தியானம்ஆகாய விமானம் மேலே பறக்கிறது. மேக மண்டலத்துக்கு மேலே அது போய்விட்டால் அதன் வேகமான பயணத்துக்குத் தடையொன்றுமில்லை. மனிதன் எண்ணத்தில் மிக உயரமாய்ப் போய்விடு வானானால் உலகத்தவர்களிடமுள்ள குறைபாடு களோடு அவனுக்கு முரண்பாடு உண்டாகாது.1 view -
செப்டம்பர் 21 | நிராசை | தினசரி தியானம்
தினசரி தியானம்பிறவியைப் பெருக்குவது ஆசை. பிரபஞ்ச வாழ்வில் அல்லல்களை உண்டுபண்ணுவது ஆசை. சாந்தியைக் கலைப்பது ஆசை. ஆனந்தத்தை மறைப்பது ஆசை. நிராசையோ மனிதனை தெய்வ சன்னிதியில் சேர்த்துவிடுகிறது.19 views 1 comment -
செப்டம்பர் 20 | பொய்யறவு | தினசரி தியானம்
தினசரி தியானம்உடல் ஓயாது மாறியமைந்து கொண்டிருக்கிறது. நேற்று இருந்ததுபோல் அது இன்று இருப்பதில்லை. திட்பமுற்றிருக்கும்போது தெய்வ வழிபாட்டுக்கு அது நல்ல உறவு ஆகிறது. நோய்வாய்ப் பட்டிருக்கும்போது அது பெருந்தடையாகிறது. எனவே அதன் உறவைப் பொய்யுறவு என்று அறிதல் வேண்டும்.9 views -
செப்டம்பர் 19 | குரங்கு | தினசரி தியானம்
தினசரி தியானம்அடங்காத மனம் குரங்கு போன்றது. அது ஆசை என்னும் கள்ளைக் குடித்துவிட்டது; வெறி பிடித்து ஆடுகிறது. பின்பு பொறாமை என்னும் தேள் அதைக் கொட்டி விட்டது. அப்பொழுது அது படும்பாடு சொல்லி முடியாதது. -
செப்டம்பர் 18 | திரை | தினசரி தியானம்
தினசரி தியானம்உள்ளிருக்கும் தெய்வத்தைக் காணவொட்டாது மறைத்திருப்பது அக்ஞானம் என்னும் திரை. ஆசாபாசங்கள், அபிப்பிராயங்கள், வெறுப்பு, வெகுளி இப்படியெல்லாம் வடிவெடுத்ததாய் இருக்கிறது அத்திரை. இக்குறைபாடுகளையெல்லாம் களையுங்கால் திரையும் நீக்கப்பெறுகிறது.3 views -
செப்டம்பர் 17 | பூ | தினசரி தியானம்
தினசரி தியானம்படிப்படியாக வளர்ந்து தேவாராதனைக்குத் தகுதியுடையதாகப் பூவானது தன்னை அமைத்துக் கொள்கிறது. மனிதன் நாள்தோறும் தூயவனாகவும் மேலானவனாகவும் தன்னைத் திருத்தியமைத்துக்கொள்ள வேண்டும். நலத்துக்கு நிகரானது நானிலத்தில் வேறு ஏதும் இல்லை.3 views 1 comment -
செப்டம்பர் 16 | அகத்தில் இருப்பது | தினசரி தியானம்
தினசரி தியானம்நம் மனத்தில் இருப்பதைத்தான் நாம் வெளியுலகிலும் காண்கிறோம். மனம் திருந்தியமையுமளவு புறவுலகில் ஒழுங்குப்பாடு இருப்பதைக் காண்போம். மனம் முற்றிலும் நேர்மையடைந்து விட்டால் புறத்திலும் அந்த நேர்மையைக் காண்போம். -
செப்டம்பர் 15 | நெடும் பயணம் | தினசரி தியானம்
தினசரி தியானம்பயணங்களுள் பெரியது கடவுளை நோக்கிப் போகும் பயணம். அது பல கற்ப காலமாக நிகழ்ந்து கொண்டே இருக்கலாம். பின்பு, பயணங்களுள் மிகக் குறுகியதும் கடவுளை நோக்கிப் போகும் பயணமேயாம். அது நொடிப்பொழுதில் பூர்த்தி ஆய்விடலாம். அது மனதைப் பொறுத்தது.1 view -
செப்டம்பர் 14 | ஆறுதல் எங்கே | தினசரி தியானம்
தினசரி தியானம்இந்த நிலவுலகிலே எல்லாம் நாசமடைந்து வருகின்றன. நமது அன்புக்குரியவர் அழிந்துபட்டுப் போயினர். நண்பர் என்பார் நம்மைக் கைநழுவ விட்டு விட்டனர். செல்வம் எல்லாம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் உண்மை ஒன்று மட்டும் உறுதியாக நிற்கிறது. அவ்வுண்மையும் இறைவனும் ஒன்றே.