
ஜூலை | தினசரி தியானம்
7 videos
Updated 15 days ago
மானுட அமைப்பில் உடலினும் உயர்ந்தது உள்ளம். உடலில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை முன்னிட்டு மனிதன் கீழோனாகக் கருதப்படமாட்டான். ஆனால் மனத்தில் நேர்மையும் ஒழுக்கமும் நல்லறிவும் அமையப் பெறாதிருக்குமளவு அவன் புன்மையன் ஆவான். மனத்தை மாண்புறச் செய்யுமளவு மனிதன் மேலோன் ஆகிறான்.
உணவு ஊட்டி உடலை வளர்க்கிறோம். அப்படி உடலைப் பேணுவது உயிர்கள் அனைத்துக்கும் பொதுவானது. பின்பு உள்ளத்தைப் பேணுவது மனிதனுடைய தனிச்செயல் ஆகிறது. நல்லுணவையே உடலுக்குத் தரவேண்டும்; உணவு வெவ்வேறு வகைப்பட்டதாக இருக்கவேண்டும். விதவிதமான உணவு நாவுக்கு இனியதும் உடலுக்கு உறுதி தருவதும் ஆகும். நல்லெண்ணமும் நல்லுணர்வும் உள்ளத்துக்கு உணவு ஆகின்றன. எத்தனைவிதமான நல்லெண்ணங்களை எண்ணுகின்றோமோ அத்தனை விதங்களில் உள்ளம் உறுதிபெறும், மனத்துக்கு இனிய நல்லுணவு ஆவது "தினசரிதியானம்". அன்றாடம் வழிபாட்டுக்குப் பிறகு ஓர் எண்ணத்தை இதனின்று பெறலாம். பிறகு அதைப்பற்றிச் சிந்தனை பண்ணுவது அவசியம். சிந்திக்குமளவு அந்த மூலக்கருத்தில் வெவ்வேறு கிளை எண்ணங்களும் உள்ளத்தில் உதிக்கும். உள்ளத்தினுள் பக்தியையும் ஞானத்தையும் வளர்ப்பதற்கு இது உற்றதோர் உபாயம்.
தேதியை ஆங்கில முறையில் அல்லது தமிழ் முறையில் அவரவர் விருப்பம்போல் பின்பற்றலாம். சில வருடங்களில் ஆங்கிலத் தேதியும் தமிழ்த்தேதியும் ஒத்திருக்கும்; வேறு சில வருடங்களில் ஒருநாள் முன்னது பின்னதாக இருக்கும். "தினசரி தியானம்" என்னும் தலைப்புக் கொடுத்து இயற்றியுள்ள இந்நூலில் அடங்கி இருக்கிற கருத்துக்கள் ஆத்ம சாதனத்துக்கு நன்கு உதவும் என்பது சொல்லாமலே விளங்கும்.
திருப்பராய்த்துறை 20-8-60
சுவாமி சித்பவானந்த.
-
ஜூலை 31 | பட்சபாதம் | தினசரி தியானம்
தினசரி தியானம்இயற்கையின் நடைமுறை நேர்மையே வடிவெடுத்தது. பட்சபாதம் அதனிடத்தில்லை. அதை எதிர்த்தால் துன்பம் வருகிறது; அதை அனுசரித்தால் இன்பம் வருகிறது. தவறுதலுக்குத் தண்டனையில்லாது போய்விட்டால் நேர்மைக்கு வெகுமதியும் இல்லாது போய்விடும். அத்தகைய நிலையே பட்சபாதம் எனப்படுவது. இறைவனுடைய ஆதிக்கத்தில் பட்சபாதத்துக்கு இடமில்லை. வினைக்கேற்ற வினைப்பயனை அவர் விதித்துள்ளார். -
ஜூலை 30 | ஆள் இல்லாத படகு | தினசரி தியானம்
தினசரி தியானம்படகு ஒன்றில் நிறையப் போக்கிரிகள் போய்க் கொண்டிருந்தார்கள். சினமும், சச்சரவும், செருக்கும் வடிவெடுத்தவர்கள் அவர்கள். அன்னவர் ஊர்ந்து சென்ற படகைக் காலிப் படகு ஒன்று மிதந்துகொண்டு வந்து மோதியது. அது மோதியதை முன்னிட்டு யாரும் மனத்தாங்கல் கொள்ளவில்லை. அதற்கு மாறாக, அது ஓர் ஆளாவது ஊர்ந்த படகாயிருந்திருக்குமாயின் வம்பு மிக வந்திருக்கும். நமது மனம் என்ற படகில் ஆணவ அஹங்காரம் என்ற ஆட்கள் இல்லாவிட்டால் நம்முடன் யாரும் சண்டைக்கு வரமுடியாது. -
ஜூலை 29 | ஞான தீபம் | தினசரி தியானம்
தினசரி தியானம்விவேகமே வடிவெடுத்தது ஞான தீபம். பக்தி யினின்று பெருக்கெடுக்கும் அமைதியே அதற்கு எண்ணெய். ஈசுவரத் தியானம் அது எரிவதற்கு ஏற்ற நல்ல காற்றாகிறது. இடையறாப் பிரம்மச்சரியத் தினின்று வரும் பேருணர்வு அத்தீபத்துக்குத் திரியா கிறது. பற்றற்ற உள்ளம் அந்த விளக்கை வைப்பதற் கேற்ற இடமாகிறது. அங்கு ஆசையென்னும் புயல் காற்றடிக்காதிருக்க வேண்டும். ஈசுவர சொரூபம் அத்தீபத்தில் எரியும் ஒளிப் பிழம்பாகிறது.6 views -
ஜூலை 28 | ஆளுதலும் ஆட்படுதலும் | தினசரி தியானம்
தினசரி தியானம்பாரமார்த்திகப் பேருண்மையை அறியாத பாமரர்கள் எண்ணத்துக்கு அடிமையாகிறார்கள். ஞானியோ எண்ணத்துக்கு இறைவன். அப்போதைக்கப்போது கிடைக்கும் இன்பத்தை விரும்பி ஆடுமாடு போன்று பாமரர் சிற்றியல்புக்கு ஆட்படுகின்றனர். மருந்துக்குரிய செடியை மருத்துவன் தேடியெடுப்பது போன்று, நலம் தரும் சீரிய எண்ணத்தை ஞானி மனத்தின்கண் நாட்டுகிறான். வாழ்க்கை என்னும் ராஜ்யத்தை ஞானி ஆளுகிறான். மற்றவர் வாழ்க்கைக்கு ஆட்படுகின்றனர்.1 view -
ஜூலை 25 | அறிதற்கெளியது | தினசரி தியானம்
தினசரி தியானம்சான்றோர் புகட்டிய செந்நெறியைக் கடைப் பிடித்தால் மக்கள் சான்றோர் ஆகக்கூடும். அச் செந்நெறி அறிதற்கெளிது, நேரானது; அதற்கு வியாக்கியானம் எழுதவேண்டியதில்லை. கல்லாதவர்க்கும் குழந்தைகளுக்கும் அது விளங்குகிறது. அது பேச்சுக்குரியதன்று; வாழ்வோடு சம்பந்தப்பட்டது. அதை அனுஷ்டிக்குமளவு மனத்தகத்துள்ள தெய்விகத்தையும் நாம் அறிந்துகொள்ளமுடியும்.13 views -
ஜூலை 26 | பேரியல்பு | தினசரி தியானம்
தினசரி தியானம்தூய உள்ளம், நேரான எண்ணம், நல்வினை ஆகிய இவை யாவும் மனிதனது பேரியல்பைப் பெருக்குதற்கென்று அமைந்தவைகளாம். அதிக மான ஆற்றலும், பெரு நன்மையும், தெவிட்டாத இன்பமும் உண்டாவது மனபரிபாகத்தினின்றேயாம். பெரு முயற்சி, ஆழ்ந்த எண்ணம், தெய்விகப் பற்று ஆகிய இவைகளின் மூலமாகவே மேலோர் எக்காலத் திலும் தங்களது மேலான இயல்பை வளர்க்கலாயினர். சிற்றியல்புடைய மனிதன் மனப்பரிபாகத்தால் பேரியல் புடைய மனிதனாக மாறியமைகிறான்.17 views -
ஜூலை 27 | தக்ஷன் யக்ஞம் | தினசரி தியானம்
தினசரி தியானம்தக்ஷப்பிரஜாபதியின் யக்ஞத்தில் எல்லாம் இருந்தன. பொருள்களுக்குக் குறைவில்லை; போகத் துக்குக் குறைவில்லை. போகப் பொருள்களைப் புசிக்க வந்தவர்களுக்கும் குறைவில்லை. கடவுள் ஒருவர்க்கு மட்டும் ஆங்கு இடமில்லை. எஜமானன் தெய்வத்தை இகழவும் செய்தான்.ஆகையால் எல்லாம் அனர்த்தமாய் முடிந்தன.12 views 1 comment