
அக்டோபர் | தினசரி தியானம்
22 videos
Updated 22 hours ago
மானுட அமைப்பில் உடலினும் உயர்ந்தது உள்ளம். உடலில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை முன்னிட்டு மனிதன் கீழோனாகக் கருதப்படமாட்டான். ஆனால் மனத்தில் நேர்மையும் ஒழுக்கமும் நல்லறிவும் அமையப் பெறாதிருக்குமளவு அவன் புன்மையன் ஆவான். மனத்தை மாண்புறச் செய்யுமளவு மனிதன் மேலோன் ஆகிறான். உணவு ஊட்டி உடலை வளர்க்கிறோம். அப்படி உடலைப் பேணுவது உயிர்கள் அனைத்துக்கும் பொதுவானது. பின்பு உள்ளத்தைப் பேணுவது மனிதனுடைய தனிச்செயல் ஆகிறது. நல்லுணவையே உடலுக்குத் தரவேண்டும்; உணவு வெவ்வேறு வகைப்பட்டதாக இருக்கவேண்டும். விதவிதமான உணவு நாவுக்கு இனியதும் உடலுக்கு உறுதி தருவதும் ஆகும். நல்லெண்ணமும் நல்லுணர்வும் உள்ளத்துக்கு உணவு ஆகின்றன. எத்தனைவிதமான நல்லெண்ணங்களை எண்ணுகின்றோமோ அத்தனை விதங்களில் உள்ளம் உறுதிபெறும், மனத்துக்கு இனிய நல்லுணவு ஆவது "தினசரிதியானம்". அன்றாடம் வழிபாட்டுக்குப் பிறகு ஓர் எண்ணத்தை இதனின்று பெறலாம். பிறகு அதைப்பற்றிச் சிந்தனை பண்ணுவது அவசியம். சிந்திக்குமளவு அந்த மூலக்கருத்தில் வெவ்வேறு கிளை எண்ணங்களும் உள்ளத்தில் உதிக்கும். உள்ளத்தினுள் பக்தியையும் ஞானத்தையும் வளர்ப்பதற்கு இது உற்றதோர் உபாயம். தேதியை ஆங்கில முறையில் அல்லது தமிழ் முறையில் அவரவர் விருப்பம்போல் பின்பற்றலாம். சில வருடங்களில் ஆங்கிலத் தேதியும் தமிழ்த்தேதியும் ஒத்திருக்கும்; வேறு சில வருடங்களில் ஒருநாள் முன்னது பின்னதாக இருக்கும். "தினசரி தியானம்" என்னும் தலைப்புக் கொடுத்து இயற்றியுள்ள இந்நூலில் அடங்கி இருக்கிற கருத்துக்கள் ஆத்ம சாதனத்துக்கு நன்கு உதவும் என்பது சொல்லாமலே விளங்கும். திருப்பராய்த்துறை 20-8-60 சுவாமி சித்பவானந்த. #tamil #devotional #lifetraining #shortstory #thoughtfulness #spirituality #mindandsoul #purityoflife
-
அக்டோபர் 22 | சமாதானம் | தினசரி தியானம்
தினசரி தியானம்சமாதானம் வேண்டுமென்று உலகத்தவர் ஓலமிடுகின்றனர். ஆனால் அவர்கள் உள்ளத்தில் ஓயாது பொங்கியெழுந்து கொண்டிருப்பது போராட்டமும் சஞ்சலமுமேயாம். தான், தனது என்பனவற்றைத் துறந்தார்க்கன்றி நிலைத்த சமாதானம் உண்டாகாது. -
அக்டோபர் 21 | சிரத்தை | தினசரி தியானம்
தினசரி தியானம்சிரத்தைக்கேற்றவாறு மனிதன் மேன்மையடைகிறான். தான் மேன்மையடைந்தே ஆகவேண்டுமென்று முதலில் அவன் அதன்மீது சிரத்தை வைத்தாக வேண்டும். தான் அடையும் லஷியமே தனக்கேற்ற பெருநிலையென்று அந்த லக்ஷியத்தின்மீது அடுத்தபடி சிரத்தை காட்டவேண்டும். மூன்றாவதாகத் தான் ஒழுகும் மார்க்கத்தில் சிரத்தை வைக்க வேண்டும். -
அக்டோபர் 20 | சகித்தல் | தினசரி தியானம்
தினசரி தியானம்மண்ணுலகில் பிறப்பெடுத்திருப்பவர்களுக்குத் துன்பத்துக்குமேல் துன்பம் வந்து கொண்டேயிருக்கும். அவைகளைப் பொறுத்துக்கொள்ளுமளவு மனம் உறுதி பெறுகிறது. துன்பத்தில் தளர்வுறுமளவு மனவலிவு குறைகிறது. உறுதியான உள்ளம் படைத்துத் துன்பத்தைப் பொருள்படுத்தாதிருப்பது திதிஷை.2 views -
அக்டோபர் 19 | உள்ளக் கொதிப்பு | தினசரி தியானம்
தினசரி தியானம்பொருந்தியவைகளும் பொருந்தாதவைகளுமாகிய எண்ணிறந்த விருத்திகள் மனத்தினுள் உதித்துக்கொண்டே இருக்கின்றன. அவைகளை ஓய்ந்திருக்கப் பண்ணவேண்டும். தோன்றத் தோன்ற அவைகளை ஒதுக்கி வைக்கவும் வேண்டும். திரையற்ற கடல் போன்று மனம் ஆய்விட்டால் அது உபரதியாகும்.1 view -
அக்டோபர் 18 | தமம் | தினசரி தியானம்
தினசரி தியானம்சுவையை நம்பி மீன் தூண்டிலில் சிக்கிக் கொள்கிறது. கண் கொண்டு தீயில் பற்று வைத்து விட்டில் பூச்சி அதில் வீழ்ந்து மாய்கிறது. ஊறு அல்லது ஸ்பரிசத்தை நம்பி யானை பிடிபடுகிறது. ஓசைக்கு அடிமையாகி மான் பிடிபடுகிறது. மணத்தை நாடி வண்டு மலரில் அகப்படுகிறது. இந்த ஐம்பொறிகளையும் நம்பியோடுகிற மனிதன் கதி என்னாவது? ஐம்பொறிகளை அடக்குவது தமம்.1 view -
அக்டோபர் 17 | சமம் | தினசரி தியானம்
தினசரி தியானம்தத்தளித்துக் கொண்டிருக்கும் நீரில் மனிதன் தனது பிம்பத்தையோ, ஒரு மரத்தின் பிம்பத்தையோ, சந்திரனது பிம்பத்தையோ சரியாகக் காணமுடியாது. அலைந்துகொண்டிருக்கும் மனத்தில் உண்மை ஒளிர்வதில்லை. சமம் என்பது மனம் அடங்கிய நிலை. ஞானத்துக்கு அது முற்றிலும் அவசியமானது.1 view -
அக்டோபர் 16 | வியாகூலம் | தினசரி தியானம்
தினசரி தியானம்விடாப்பிடி கொள்வதைச் சிலர் வைராக்கியம் என்று எண்ணுகின்றனர். உண்மை அதுவன்று. ராகம் என்றால் பற்றுதல்; விராகம் அல்லது வைராக்கியம் என்றால் பற்றற்ற நிலை. உலக விஷயங்களில் வைராக்கியம் வந்தால் பகவத் விஷயங்களில் இயல்பாக நாட்டம் உண்டாகும். வைராக்கியம் இல்லாதவனுக்கு ஆத்மசாதனம் இல்லை.1 view -
அக்டோபர் 15 | வியாகூலம் | தினசரி தியானம்
தினசரி தியானம்பணம் போகம், பதவி, புகழ் ஆகியவைகளைப் பற்றி அல்லும் பகலும் மனிதன் வியாகூலப்படுகிறான். அதிவிரைவில் அவை யாவும் மறைந்து போகக் கூடியவைகள் என்பதை அவன் எண்ணிப் பார்ப்பதில்லை. அதே வியாகூலத்தைக் கடவுளின் பொருட்டு அவன் அடைவானாகில் அது நித்தியானந்தத்துக்கு வழிகாட்டிவிடும்.1 view -
அக்டோபர் 14 | விவேகம் | தினசரி தியானம்
தினசரி தியானம்நித்தியமாய், மனிதனுக்கு நலன் தருவதாய் இருப்பது எது என்று பாகுபடுத்த வேண்டும். உடலையும் உள்ளத்தையும் பற்றிய யாவும் ஓயாது மாறிக்கொண்டிருக்கின்றன. ஆகையால் அவை நித்தியமானவைகள் அல்ல. அறிவையும் ஆனந்தத்தையும் பற்றியவையே நித்தியமானவை. இதை அறிந்து கொள்ளுதல் விவேகம்.2 views -
அக்டோபர் 13 | ஓயாத பாடம் | தினசரி தியானம்
தினசரி தியானம்மனிதன் ஆனந்தத்தை நாடுகிறான். ஆனால் நிலையற்ற உலகப் பொருள்களிடத்தில் அவன் அதை நாடி ஏமாற்றமடைகிறான். அடிமேல் அடியடித்து இயற்கைத் தாய் அந்த இன்பம் அழியும் பொருள்களிடத்து இல்லையென்ற பாடத்தைப் புகட்டுகிறாள். ஆனந்தத்துக்கு இருப்பிடம் இறைவன் என்பதை அறிந்துகொள்ளும்வரை அப்பாடம் நடக்கிறது.1 view