நவம்பர் | தினசரி தியானம்
30 videos
Updated 1 month ago
மானுட அமைப்பில் உடலினும் உயர்ந்தது உள்ளம். உடலில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை முன்னிட்டு மனிதன் கீழோனாகக் கருதப்படமாட்டான். ஆனால் மனத்தில் நேர்மையும் ஒழுக்கமும் நல்லறிவும் அமையப் பெறாதிருக்குமளவு அவன் புன்மையன் ஆவான். மனத்தை மாண்புறச் செய்யுமளவு மனிதன் மேலோன் ஆகிறான்.
உணவு ஊட்டி உடலை வளர்க்கிறோம். அப்படி உடலைப் பேணுவது உயிர்கள் அனைத்துக்கும் பொதுவானது. பின்பு உள்ளத்தைப் பேணுவது மனிதனுடைய தனிச்செயல் ஆகிறது. நல்லுணவையே உடலுக்குத் தரவேண்டும்; உணவு வெவ்வேறு வகைப்பட்டதாக இருக்கவேண்டும். விதவிதமான உணவு நாவுக்கு இனியதும் உடலுக்கு உறுதி தருவதும் ஆகும். நல்லெண்ணமும் நல்லுணர்வும் உள்ளத்துக்கு உணவு ஆகின்றன. எத்தனைவிதமான நல்லெண்ணங்களை எண்ணுகின்றோமோ அத்தனை விதங்களில் உள்ளம் உறுதிபெறும், மனத்துக்கு இனிய நல்லுணவு ஆவது "தினசரிதியானம்". அன்றாடம் வழிபாட்டுக்குப் பிறகு ஓர் எண்ணத்தை இதனின்று பெறலாம். பிறகு அதைப்பற்றிச் சிந்தனை பண்ணுவது அவசியம். சிந்திக்குமளவு அந்த மூலக்கருத்தில் வெவ்வேறு கிளை எண்ணங்களும் உள்ளத்தில் உதிக்கும். உள்ளத்தினுள் பக்தியையும் ஞானத்தையும் வளர்ப்பதற்கு இது உற்றதோர் உபாயம்.
தேதியை ஆங்கில முறையில் அல்லது தமிழ் முறையில் அவரவர் விருப்பம்போல் பின்பற்றலாம். சில வருடங்களில் ஆங்கிலத் தேதியும் தமிழ்த்தேதியும் ஒத்திருக்கும்; வேறு சில வருடங்களில் ஒருநாள் முன்னது பின்னதாக இருக்கும். "தினசரி தியானம்" என்னும் தலைப்புக் கொடுத்து இயற்றியுள்ள இந்நூலில் அடங்கி இருக்கிற கருத்துக்கள் ஆத்ம சாதனத்துக்கு நன்கு உதவும் என்பது சொல்லாமலே விளங்கும்.
திருப்பராய்த்துறை 20-8-60
சுவாமி சித்பவானந்த.
#tamil #devotional #lifetraining #shortstory #thoughtfulness #spirituality #mindandsoul #purityoflife
-
நவம்பர் 30 | தொண்டன் | தினசரி தியானம்
தினசரி தியானம்மேடுகளில் இருக்கும் சிற்றாறுகளெல்லாம் பள்ளத்தில் இருக்கும் பேராற்றில் கலக்கின்றன. உயிர்கள் எல்லாம் தொண்டனுக்குச் சொந்தமாய்விடுகின்றன. மற்றவர்களுக்கு அவன் தலைவன் எனினும் தலைச்சுமை போன்று அவன் யாருக்கும் தொந்தரவு கொடுப்பதில்லை. மற்றவர்களுக்கு அவன் முன்நிற்பவன் எனினும் யாருக்கும் இடைஞ்சல் செய்வதில்லை. தொண்டன் யாருக்கும் எதிரியல்லன்.3 views -
நவம்பர் 29 | முன்யோசனை | தினசரி தியானம்
தினசரி தியானம்செய்து சாதிப்பதற்குக் கடினமானதை முன் யோசனை செய்பவன் எளிதில் முடித்து விடுகிறான். மிகப்பெரிய காரியத்துக்கும் சிறிய துவக்கமிருக்கிறது என்பதை முன்யோசனைக்காரன் தெரிந்து கொள்கிறான். சிறு செயல்களிடத்தும் ஆழ்ந்து கருத்துச் செலுத்துபவன் சான்றோன்.2 views -
நவம்பர் 28 | நல்வழி | தினசரி தியானம்
தினசரி தியானம்அரசனது ஆதரவு நல்வழியின் ஆதரவுக்கு நிகராகாது. செல்வத்தின் ஆதிக்கம் நல்வழியின் ஆதிக்கத்துக்கு ஈடாகாது. ஆயுதத்தின் வல்லமை நல்வழியின் வல்லமைக்கு ஒப்பாகாது. நண்பனது நட்பு நல்வழியின் நட்புக்குச் சமனாகாது. நல்வழி ஒன்றே மனிதனுக்கு யாண்டும் பெருந்துணையாகிறது.4 views -
நவம்பர் 27 | விநயம் | தினசரி தியானம்
தினசரி தியானம்மேட்டில் மழை நீர் நிற்பதில்லை. பள்ளமான இடத்துக்கு அது பாய்ந்து சாகுபடிக்கு உதவுகிறது. வீண் பெருமை கொண்டிருப்பவன் உள்ளத்தில் இறைவன் அருள் தங்குவதில்லை. விநயத்துடன் பணிந்திருப்பவன் உள்ளமே அருளுக்குத் தங்குமிடமாகிறது.7 views -
நவம்பர் 26 | நாராயண சேவை | தினசரி தியானம்
தினசரி தியானம்ஆலயத்தின்கண் எழுந்தருளப் பண்ணியிருக்கும் மூர்த்தியை ஆராதிப்பதன்மூலம் ஆராதனை முறையைக் கற்றுக்கொள்கிறோம். பின்பு நாம் தொடர்வுகொள்ளும் உயிர்கள் அனைத்துக்கும் உள்ளன்போடு பணிவிடை செய்தல் வேண்டும். உயிர்களிடத்து நாம் கொண்டுள்ள இணக்கமே இறைவணக்கம் என்னும் பெயர் பெறுகிறது.9 views -
நவம்பர் 25 | சிவ பூஜை | தினசரி தியானம்
தினசரி தியானம்ஆண்டவனே ஆருயிர் வடிவங்களில் இலங்குகிறார். ஒவ்வோர் உயிரோடும் இணக்கம் கொள்ளும்போது அது இறைவனோடு கொள்ளும் இணக்கம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் அந்த இணக்கம் தானாகவே நல்லிணக்கம் ஆய்விடும்.1 view -
நவம்பர் 24 | சக்தி பூஜை | தினசரி தியானம்
தினசரி தியானம்தாயின் வாஞ்சையை அறிகிறவன் தெய்வத்தின் கருணையை அறிகிறான். கருத்தரித்த நாள் முதல் காலமெல்லாம் தன் குழந்தைக்கென்றே வாழ்ந் திருப்பவள் தாய். அன்னை பராசக்தி உயிர்களைப் பரத்தினிடம் சேர்க்கும்வரையில் தனது கருணாகரக் கண்காணிப்பைச் செலுத்தி வருகிறாள்.1 view -
நவம்பர் 23 | ஐம்பெரு வேள்வி | தினசரி தியானம்
தினசரி தியானம்நித்தம் செய்யும் பரம்பொருள் வழிபாடே தேவ யக்ஞம். பக்தியுடன் பனுவல் படிப்பது ரிஷி யக்ஞம். பெற்றோர்க்குப் பணிவிடை செய்வதும் காலஞ் சென்ற முன்னோர்க்கு நல்லெண்ணம் செலுத்துவதும் பிதிர் யக்ஞம். மக்களுக்குத் தொண்டு புரிவது நர யக்ஞம். மற்ற உயிர்களிடத்து அன்பாயிருப்பது பூத யக்ஞம். இவ்வைந்தும் பெருவேள்விகளாம்.3 views -
நவம்பர் 22 | வேள்வி | தினசரி தியானம்
தினசரி தியானம்உலகினின்று தான் ஏற்பதைவிட யார் உலகுக்கு அதிகமாக வழங்குகிறானோ அவன் வேள்வி வேட்பவன் ஆகிறான். வேள்வியின் மூலமாகவன்றி வாழ்க்கையில் முன்னேற்றமில்லை. வேள்வி வேட்காதவன் திருடன். வேள்வி வேட்பவனோ இகம் பரம் ஆகிய இரண்டையும் பெறுகிறான்.2 views -
நவம்பர் 21 | தனக்குத் தானே துணை | தினசரி தியானம்
தினசரி தியானம்தான் உண்ணும் உணவை மனிதன் தானே ஜீரணம் பண்ணியாக வேண்டும். உடல் வளர்ச்சி தன்னையே பொறுத்தது. அறிவு வளர்ச்சியும் தனக்குத் தானே செய்துகொள்வதாகும். வழிகாட்டித் தருவதோடு ஆசிரியர் வேலை நின்றுவிடுகிறது. அருள் துறையில் முன்னேற்றம் அடைவதற்கும் தானே முயன்றாக வேண்டும். யாண்டும் தனக்குத் தானே சுற்றம்.2 views