ஜூலை 28 | ஆளுதலும் ஆட்படுதலும் | தினசரி தியானம்

1 month ago
1

பாரமார்த்திகப் பேருண்மையை அறியாத பாமரர்கள் எண்ணத்துக்கு அடிமையாகிறார்கள். ஞானியோ எண்ணத்துக்கு இறைவன். அப்போதைக்கப்போது கிடைக்கும் இன்பத்தை விரும்பி ஆடுமாடு போன்று பாமரர் சிற்றியல்புக்கு ஆட்படுகின்றனர். மருந்துக்குரிய செடியை மருத்துவன் தேடியெடுப்பது போன்று, நலம் தரும் சீரிய எண்ணத்தை ஞானி மனத்தின்கண் நாட்டுகிறான். வாழ்க்கை என்னும் ராஜ்யத்தை ஞானி ஆளுகிறான். மற்றவர் வாழ்க்கைக்கு ஆட்படுகின்றனர்.

Loading comments...