ஜூலை 29 | ஞான தீபம் | தினசரி தியானம்

1 month ago
6

விவேகமே வடிவெடுத்தது ஞான தீபம். பக்தி யினின்று பெருக்கெடுக்கும் அமைதியே அதற்கு எண்ணெய். ஈசுவரத் தியானம் அது எரிவதற்கு ஏற்ற நல்ல காற்றாகிறது. இடையறாப் பிரம்மச்சரியத் தினின்று வரும் பேருணர்வு அத்தீபத்துக்குத் திரியா கிறது. பற்றற்ற உள்ளம் அந்த விளக்கை வைப்பதற் கேற்ற இடமாகிறது. அங்கு ஆசையென்னும் புயல் காற்றடிக்காதிருக்க வேண்டும். ஈசுவர சொரூபம் அத்தீபத்தில் எரியும் ஒளிப் பிழம்பாகிறது.

Loading comments...