ஜூலை 30 | ஆள் இல்லாத படகு | தினசரி தியானம்

2 months ago

படகு ஒன்றில் நிறையப் போக்கிரிகள் போய்க் கொண்டிருந்தார்கள். சினமும், சச்சரவும், செருக்கும் வடிவெடுத்தவர்கள் அவர்கள். அன்னவர் ஊர்ந்து சென்ற படகைக் காலிப் படகு ஒன்று மிதந்துகொண்டு வந்து மோதியது. அது மோதியதை முன்னிட்டு யாரும் மனத்தாங்கல் கொள்ளவில்லை. அதற்கு மாறாக, அது ஓர் ஆளாவது ஊர்ந்த படகாயிருந்திருக்குமாயின் வம்பு மிக வந்திருக்கும். நமது மனம் என்ற படகில் ஆணவ அஹங்காரம் என்ற ஆட்கள் இல்லாவிட்டால் நம்முடன் யாரும் சண்டைக்கு வரமுடியாது.

Loading comments...