Premium Only Content
This video is only available to Rumble Premium subscribers. Subscribe to
enjoy exclusive content and ad-free viewing.

ஜூலை | தினசரி தியானம்
DinasariDhyanam
- 2 / 7
1
ஜூலை 31 | பட்சபாதம் | தினசரி தியானம்

தினசரி தியானம்
இயற்கையின் நடைமுறை நேர்மையே வடிவெடுத்தது. பட்சபாதம் அதனிடத்தில்லை. அதை எதிர்த்தால் துன்பம் வருகிறது; அதை அனுசரித்தால் இன்பம் வருகிறது. தவறுதலுக்குத் தண்டனையில்லாது போய்விட்டால் நேர்மைக்கு வெகுமதியும் இல்லாது போய்விடும். அத்தகைய நிலையே பட்சபாதம் எனப்படுவது. இறைவனுடைய ஆதிக்கத்தில் பட்சபாதத்துக்கு இடமில்லை. வினைக்கேற்ற வினைப்பயனை அவர் விதித்துள்ளார்.
ஜூலை 30 | ஆள் இல்லாத படகு | தினசரி தியானம்

தினசரி தியானம்
படகு ஒன்றில் நிறையப் போக்கிரிகள் போய்க் கொண்டிருந்தார்கள். சினமும், சச்சரவும், செருக்கும் வடிவெடுத்தவர்கள் அவர்கள். அன்னவர் ஊர்ந்து சென்ற படகைக் காலிப் படகு ஒன்று மிதந்துகொண்டு வந்து மோதியது. அது மோதியதை முன்னிட்டு யாரும் மனத்தாங்கல் கொள்ளவில்லை. அதற்கு மாறாக, அது ஓர் ஆளாவது ஊர்ந்த படகாயிருந்திருக்குமாயின் வம்பு மிக வந்திருக்கும். நமது மனம் என்ற படகில் ஆணவ அஹங்காரம் என்ற ஆட்கள் இல்லாவிட்டால் நம்முடன் யாரும் சண்டைக்கு வரமுடியாது.
3
ஜூலை 29 | ஞான தீபம் | தினசரி தியானம்

தினசரி தியானம்
விவேகமே வடிவெடுத்தது ஞான தீபம். பக்தி யினின்று பெருக்கெடுக்கும் அமைதியே அதற்கு எண்ணெய். ஈசுவரத் தியானம் அது எரிவதற்கு ஏற்ற நல்ல காற்றாகிறது. இடையறாப் பிரம்மச்சரியத் தினின்று வரும் பேருணர்வு அத்தீபத்துக்குத் திரியா கிறது. பற்றற்ற உள்ளம் அந்த விளக்கை வைப்பதற் கேற்ற இடமாகிறது. அங்கு ஆசையென்னும் புயல் காற்றடிக்காதிருக்க வேண்டும். ஈசுவர சொரூபம் அத்தீபத்தில் எரியும் ஒளிப் பிழம்பாகிறது.
4
ஜூலை 28 | ஆளுதலும் ஆட்படுதலும் | தினசரி தியானம்

தினசரி தியானம்
பாரமார்த்திகப் பேருண்மையை அறியாத பாமரர்கள் எண்ணத்துக்கு அடிமையாகிறார்கள். ஞானியோ எண்ணத்துக்கு இறைவன். அப்போதைக்கப்போது கிடைக்கும் இன்பத்தை விரும்பி ஆடுமாடு போன்று பாமரர் சிற்றியல்புக்கு ஆட்படுகின்றனர். மருந்துக்குரிய செடியை மருத்துவன் தேடியெடுப்பது போன்று, நலம் தரும் சீரிய எண்ணத்தை ஞானி மனத்தின்கண் நாட்டுகிறான். வாழ்க்கை என்னும் ராஜ்யத்தை ஞானி ஆளுகிறான். மற்றவர் வாழ்க்கைக்கு ஆட்படுகின்றனர்.
5
ஜூலை 25 | அறிதற்கெளியது | தினசரி தியானம்

தினசரி தியானம்
சான்றோர் புகட்டிய செந்நெறியைக் கடைப் பிடித்தால் மக்கள் சான்றோர் ஆகக்கூடும். அச் செந்நெறி அறிதற்கெளிது, நேரானது; அதற்கு வியாக்கியானம் எழுதவேண்டியதில்லை. கல்லாதவர்க்கும் குழந்தைகளுக்கும் அது விளங்குகிறது. அது பேச்சுக்குரியதன்று; வாழ்வோடு சம்பந்தப்பட்டது. அதை அனுஷ்டிக்குமளவு மனத்தகத்துள்ள தெய்விகத்தையும் நாம் அறிந்துகொள்ளமுடியும்.
6
ஜூலை 26 | பேரியல்பு | தினசரி தியானம்

தினசரி தியானம்
தூய உள்ளம், நேரான எண்ணம், நல்வினை ஆகிய இவை யாவும் மனிதனது பேரியல்பைப் பெருக்குதற்கென்று அமைந்தவைகளாம். அதிக மான ஆற்றலும், பெரு நன்மையும், தெவிட்டாத இன்பமும் உண்டாவது மனபரிபாகத்தினின்றேயாம். பெரு முயற்சி, ஆழ்ந்த எண்ணம், தெய்விகப் பற்று ஆகிய இவைகளின் மூலமாகவே மேலோர் எக்காலத் திலும் தங்களது மேலான இயல்பை வளர்க்கலாயினர். சிற்றியல்புடைய மனிதன் மனப்பரிபாகத்தால் பேரியல் புடைய மனிதனாக மாறியமைகிறான்.
7
ஜூலை 27 | தக்ஷன் யக்ஞம் | தினசரி தியானம்

தினசரி தியானம்
தக்ஷப்பிரஜாபதியின் யக்ஞத்தில் எல்லாம் இருந்தன. பொருள்களுக்குக் குறைவில்லை; போகத் துக்குக் குறைவில்லை. போகப் பொருள்களைப் புசிக்க வந்தவர்களுக்கும் குறைவில்லை. கடவுள் ஒருவர்க்கு மட்டும் ஆங்கு இடமில்லை. எஜமானன் தெய்வத்தை இகழவும் செய்தான்.ஆகையால் எல்லாம் அனர்த்தமாய் முடிந்தன.
1
comment
ஜூலை 30 | ஆள் இல்லாத படகு | தினசரி தியானம்
2 months ago
படகு ஒன்றில் நிறையப் போக்கிரிகள் போய்க் கொண்டிருந்தார்கள். சினமும், சச்சரவும், செருக்கும் வடிவெடுத்தவர்கள் அவர்கள். அன்னவர் ஊர்ந்து சென்ற படகைக் காலிப் படகு ஒன்று மிதந்துகொண்டு வந்து மோதியது. அது மோதியதை முன்னிட்டு யாரும் மனத்தாங்கல் கொள்ளவில்லை. அதற்கு மாறாக, அது ஓர் ஆளாவது ஊர்ந்த படகாயிருந்திருக்குமாயின் வம்பு மிக வந்திருக்கும். நமது மனம் என்ற படகில் ஆணவ அஹங்காரம் என்ற ஆட்கள் இல்லாவிட்டால் நம்முடன் யாரும் சண்டைக்கு வரமுடியாது.
Loading comments...
-
LIVE
StoneMountain64
3 hours agoBattlefield 6 Battle Royale Prep and Season 1 is coming
78 watching -
42:20
Rebel News
2 days agoTommy Robinson tours Jerusalem's historic City of David
4.44K25 -
12:05
Clintonjaws
6 hours ago $3.44 earnedPortland ICE Rioters Getting Arrested - This Is Priceless!
25K8 -
1:10:52
The White House
3 hours agoPress Secretary Karoline Leavitt Briefs Members of the Media, Oct. 23, 2025
31.2K10 -
48:40
iCkEdMeL
2 hours ago $1.25 earnedMafia Ties EXPOSED: NBA Stars Busted in Massive Gambling Ring 💥
17.2K6 -
46:29
Professor Nez
3 hours ago🚨I HAVE RECEIPTS! They’re Sacrificing Americans for Votes 😡
14.5K3 -
31:39
The Boomer Effect
4 hours agoGone is the Golden Age of Housing: What went wrong?
5.26K -
1:00:16
Timcast
4 hours agoTHE MOB IS BACK, FBI Busts MASSIVE Sports Betting Racket
150K42 -
2:25:56
Steven Crowder
6 hours agoCandace Just Claimed Trump Killed Charlie
442K584 -
2:43:57
Robert Gouveia
4 hours agoNewsom Crushed AGAIN!! NBA Arrests! NEW Pipe Bomber Info! Melania SUED!
28.2K13