ஆகஸ்ட் 13 | சிறைவாசம் | தினசரி தியானம்

1 month ago
7

மனிதனைத் துன்புறுத்துவது உலகில் ஒன்றுமில்லை. தனக்குத்தானே அவன் சிறை கட்டிக் கொண்டிருக்கிறான். தன்னுடைய ஆசாபாசம், தனக்கு விருப்பமான இடம், பொருள், அந்தஸ்து இவைகளில் அவன் கட்டுண்டு கிடக்கிறான். அவைகளை விட்டு விட்டால் தனக்குக் கதி வேறொன்றுமில்லையென்று அவன் வருந்துகிறான். தான் கட்டிக்கொண்ட சிறிய சிறைச்சாலையை நீத்துவிட்டால் தனக்கு வேறு என்ன கதியுளது என்று அவன் அறியாமையால் ஏங்கியிருக்கிறான்.

Loading comments...