Premium Only Content
This video is only available to Rumble Premium subscribers. Subscribe to
enjoy exclusive content and ad-free viewing.
செப்டம்பர் | தினசரி தியானம்
DinasariDhyanam
- 27 / 29
1
செப்டம்பர் 30 | ஈசன் நிலை | தினசரி தியானம்
தினசரி தியானம்
இயற்கையில் ஒவ்வொரு பொருளும் தன் மூலஸ்தானத்தையே போய்ச்சேர முயன்று கொண்டிருக்கிறது. கடலினின்று புறப்பட்ட நீராவி இறுதியில் கடலை எட்டிவிடுகிறது. மனிதன் கடவுளிடத்திலிருந்து புறப்பட்டவன். அவனிடத்துள்ள மனோவிகாரங்களாகிய அச்சம், அகங்காரம் ஆகியவைகளை ஒழித்தால் அவன் மூலஸ்தானத்தை எட்டி விடுகிறான்.
2
செப்டம்பர் 28 | இடிக்கமுடியாத மாளிகை | தினசரி தியானம்
தினசரி தியானம்
தனது உள்ளத்தில் மனிதன் கட்டும் மாளிகைக்குத் தூய்மை, நல்லறிவு, இரக்கம், அன்பு ஆகிய நான்கும் நான்கு சுவர்கள் ஆகின்றன. அமைதி அதன் கூரை. சிரத்தை அதன் தளம். இறைவழிபாடு அதன் வாயில். அருள் அதனுள் வீகம் காற்று. ஆனந்தம் ஆங்கு நிகழும் இசை.
3
செப்டம்பர் 27 | மாணிக்கம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
குப்பையில் கிடக்கும்போதும், பொன் பெட்டகத்தில் வைத்திருக்கும்போதும் மாணிக்கம் மாணிக்கமே. அன்பு, ஆனந்தம், அமைதி, பொறுமை, இரக்கம் ஆகிய நற்குணங்கள் வாய்க்கப்பெற்ற சான்றோன் எல்லா நிலைகளிலும் சான்றோனாக இருக்கிறான். தன்னைப் போற்றுபவனிடத்தும் தூற்றுபவனிடத்தும் அவன் சான்றோனாயிருக்கிறான்.
4
செப்டம்பர் 26 | இப்பொழுதே | தினசரி தியானம்
தினசரி தியானம்
நல்லாராக எல்லாரும் விரும்புகின்றனர். ஆனால் அதன் பொருட்டு அவர்கள் எதிர்காலத்தை நோக்கி நிற்கின்றனர். பசித்திருப்பவன் இப்பொழுதே புசிக்க விரும்புவது போன்று அருளுக்குப் பாத்திரமாவதற்கு இதுவே தருணம். அதைப் பெற முழு மனத்துடன் இப்பொழுதே முயலவேண்டும்.
5
செப்டம்பர் 25 | எழில் வடிவம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
அண்டங்களையெல்லாம் உருவாக்கும் மஹா சிற்பியாக சர்வேசுவரன் இருக்கிறார். என்னை நல்லவனாக உருவாக்கும் சிற்பி நான் ஆவேனாக. உள்ளுறையும் இறைவன் துணைகொண்டு என்னை நான் ஒழுங்குபடுத்தாவிட்டால் வேறு யார்க்கு அது இயலும்?
6
செப்டம்பர் 24 | முறை மாற்றம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
நீர்வீழ்ச்சி என்னும் ஆகர்ஷண சக்தியை மின்சக்தியாக மாந்தர் மாற்றியமைக்கின்றனர். போராட்டத்தை மனிதன் அமைதியாக மாற்றவேண்டும். காமத்தைக் கடவுள் பக்தியாக்க வேண்டும். வெறுப்பை அருள் கலந்த இரக்கமாக மாற்றிவிட வேண்டும். அப்பொழுது மனிதன் சான்றோனாக மாறி விடுகிறான்.
7
செப்டம்பர் 23 | நைவேத்தியம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
தெய்விகப் பேரியல்பு மனிதனிடத்து மறைந்திருக்கிறது. அதை ஞாபகமூட்டுதற்கான வாழ்வே நல்வாழ்வு ஆகிறது. பிறரோடு மனிதன் செய்கிற இணக்கம் அவர்களிடத்துள்ள பேரியல்பை முன்னணிக்குக் கொண்டு வருவதாயிருக்க வேண்டும். அதை வளர்ப்பதற்கான சொற்களும் செயல்களுமே மேலான சொற்களும் செயல்களும் ஆகின்றன.
8
செப்டம்பர் 22 | மேகமண்டலத்துக்கு மேல் | தினசரி தியானம்
தினசரி தியானம்
ஆகாய விமானம் மேலே பறக்கிறது. மேக மண்டலத்துக்கு மேலே அது போய்விட்டால் அதன் வேகமான பயணத்துக்குத் தடையொன்றுமில்லை. மனிதன் எண்ணத்தில் மிக உயரமாய்ப் போய்விடு வானானால் உலகத்தவர்களிடமுள்ள குறைபாடு களோடு அவனுக்கு முரண்பாடு உண்டாகாது.
9
செப்டம்பர் 21 | நிராசை | தினசரி தியானம்
தினசரி தியானம்
பிறவியைப் பெருக்குவது ஆசை. பிரபஞ்ச வாழ்வில் அல்லல்களை உண்டுபண்ணுவது ஆசை. சாந்தியைக் கலைப்பது ஆசை. ஆனந்தத்தை மறைப்பது ஆசை. நிராசையோ மனிதனை தெய்வ சன்னிதியில் சேர்த்துவிடுகிறது.
1
comment
10
செப்டம்பர் 20 | பொய்யறவு | தினசரி தியானம்
தினசரி தியானம்
உடல் ஓயாது மாறியமைந்து கொண்டிருக்கிறது. நேற்று இருந்ததுபோல் அது இன்று இருப்பதில்லை. திட்பமுற்றிருக்கும்போது தெய்வ வழிபாட்டுக்கு அது நல்ல உறவு ஆகிறது. நோய்வாய்ப் பட்டிருக்கும்போது அது பெருந்தடையாகிறது. எனவே அதன் உறவைப் பொய்யுறவு என்று அறிதல் வேண்டும்.
11
செப்டம்பர் 19 | குரங்கு | தினசரி தியானம்
தினசரி தியானம்
அடங்காத மனம் குரங்கு போன்றது. அது ஆசை என்னும் கள்ளைக் குடித்துவிட்டது; வெறி பிடித்து ஆடுகிறது. பின்பு பொறாமை என்னும் தேள் அதைக் கொட்டி விட்டது. அப்பொழுது அது படும்பாடு சொல்லி முடியாதது.
12
செப்டம்பர் 18 | திரை | தினசரி தியானம்
தினசரி தியானம்
உள்ளிருக்கும் தெய்வத்தைக் காணவொட்டாது மறைத்திருப்பது அக்ஞானம் என்னும் திரை. ஆசாபாசங்கள், அபிப்பிராயங்கள், வெறுப்பு, வெகுளி இப்படியெல்லாம் வடிவெடுத்ததாய் இருக்கிறது அத்திரை. இக்குறைபாடுகளையெல்லாம் களையுங்கால் திரையும் நீக்கப்பெறுகிறது.
13
செப்டம்பர் 17 | பூ | தினசரி தியானம்
தினசரி தியானம்
படிப்படியாக வளர்ந்து தேவாராதனைக்குத் தகுதியுடையதாகப் பூவானது தன்னை அமைத்துக் கொள்கிறது. மனிதன் நாள்தோறும் தூயவனாகவும் மேலானவனாகவும் தன்னைத் திருத்தியமைத்துக்கொள்ள வேண்டும். நலத்துக்கு நிகரானது நானிலத்தில் வேறு ஏதும் இல்லை.
1
comment
14
செப்டம்பர் 16 | அகத்தில் இருப்பது | தினசரி தியானம்
தினசரி தியானம்
நம் மனத்தில் இருப்பதைத்தான் நாம் வெளியுலகிலும் காண்கிறோம். மனம் திருந்தியமையுமளவு புறவுலகில் ஒழுங்குப்பாடு இருப்பதைக் காண்போம். மனம் முற்றிலும் நேர்மையடைந்து விட்டால் புறத்திலும் அந்த நேர்மையைக் காண்போம்.
15
செப்டம்பர் 15 | நெடும் பயணம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
பயணங்களுள் பெரியது கடவுளை நோக்கிப் போகும் பயணம். அது பல கற்ப காலமாக நிகழ்ந்து கொண்டே இருக்கலாம். பின்பு, பயணங்களுள் மிகக் குறுகியதும் கடவுளை நோக்கிப் போகும் பயணமேயாம். அது நொடிப்பொழுதில் பூர்த்தி ஆய்விடலாம். அது மனதைப் பொறுத்தது.
16
செப்டம்பர் 14 | ஆறுதல் எங்கே | தினசரி தியானம்
தினசரி தியானம்
இந்த நிலவுலகிலே எல்லாம் நாசமடைந்து வருகின்றன. நமது அன்புக்குரியவர் அழிந்துபட்டுப் போயினர். நண்பர் என்பார் நம்மைக் கைநழுவ விட்டு விட்டனர். செல்வம் எல்லாம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் உண்மை ஒன்று மட்டும் உறுதியாக நிற்கிறது. அவ்வுண்மையும் இறைவனும் ஒன்றே.
17
செப்டம்பர் 13 | யந்திரம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
உயிரற்ற யந்திரங்கள், உயிருற்ற யந்திரங்கள் என இரண்டுவித யந்திரங்கள் உண்டு. மனிதனால் பொருத்தப்பெற்ற மனிதன் போன்ற யந்திரம் உண்டு. அது நடக்கவும் பேசவும் செய்யும். ஆனால் அதற்கு உயிரோ உணர்வோ இல்லை. பின்பு, மனிதன் என்னும் உயிர் யந்திரமோ கடவுளையே அறிய வல்லது.
18
செப்டம்பர் 12 | பிண்டம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
கையளவு கடல் நீரையெடுத்து அதை நன்கு ஆராய்ந்தால் கடல் நீர் முழுதும் ஆராயப்பெற்றதாகிறது. பிண்டமாகிய நமது உடலுக்கு நாயகனாய் இருப்பவனைத் தெரிந்து கொண்டால் அண்ட நாயகனை நாம் அறிந்தவர் ஆகிறோம்.
19
செப்டம்பர் 11 | அன்பின் கொடை | தினசரி தியானம்
தினசரி தியானம்
இயற்கையானது ஓயாது தன்னைப் புதுப்பித் துக் கொள்கிறது. ஆதலால் அது என்றும் புத்தம் புதியது. எண்ணத்திலும் வாழ்விலும் மனிதன் தன்னை மேலோனாகப் புதுப்பிக்கக் கடமைப்பட்டிருக்கிறான்.
20
செப்டம்பர் 10 | அன்பின் கொடை | தினசரி தியானம்
தினசரி தியானம்
கைம்மாறு கேட்பது அன்பின் வழியன்று. தன்னிடத்திருப்பதையெல்லாம் ஓயாது எடுத்து வழங்குவது அன்பின் இயல்பு. அல்லல்படுவதற்கு அன்பு யாண்டும் ஆயத்தமாயிருக்கிறது. தன்னிடத்தில் இருப்பதைக் கொடுப்பதற்கு அன்பு ஆசேஷபம் செய் வதில்லை. பழிக்குப்பழி வாங்குவது அன்பின் செயல் அன்று. அன்பு ஓயாது கொடுக்கிறது.
1
comment
21
செப்டம்பர் 09 | ஆவாஹனம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
எல்லார் உள்ளங்களிலும் இறைவன் குடி கொண்டிருக்கிறார். ஆதலால் எல்லாரிடத்திலும் பேரியல்பு உண்டு. அப்பேரியல்பை முன்னணிக்குக் கொண்டுவரும்படியான நல்லிணக்கமே தெய்வ சான்னித்தியத்தை வரவழைக்கும் ஆவாஹனமாகிறது.
22
செப்டம்பர் 08 | மந்திரம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
எண்ணத்தால் மனம் உறுதி பெறுகிறது; அல்லது தளர்வுறுகிறது. உறுதிப்படுத்தும் எண்ணம் ஒவ்வொன்றும் மந்திரமாகிறது. மந்திரங்கள் எண்ணிக்கையில் அடங்காதவைகள். அவைகளுள் ஒன்றை இறுதியில் உறுதியாய்ப் பிடித்துக்கொண்டால் போதுமானது. மந்திரமே ஈசன் வடிவம்.
23
செப்டம்பர் 07 | காந்த ஊசி | தினசரி தியானம்
தினசரி தியானம்
கப்பலானது காற்றால் அலைக்கழிக்கப்படும் பொழுதும் அக்கப்பலில் இருக்கும் காந்தவூசி வட திசையையே காட்டி நிற்கிறது. வாழ்விலே மனிதனுக்கு வரும் இன்னல்களுக்கிடையில் அவனுடைய மனம் என்னும் காந்தவூசி கடவுள் என்னும் குறியையே நாடியிருக்க வேண்டும்.
24
செப்டம்பர் 06 | விழிப்பு | தினசரி தியானம்
தினசரி தியானம்
அக்ஞானத்தில் அழுந்திக் கிடப்பது உறக்கத்துக்கு ஒப்பானது. இந்திரியங்களின் வசப்பட்டுக் கிடப்பது உறக்கத்துக்கு ஒப்பானது. அப்படி எண்ணிறந்த பிறவிகள் போய்விட்டன. ஆத்ம போதத்தில் விழித்து எழுந்திருப்பதே உண்மையான விழிப்பு.
25
செப்டம்பர் 05 | மொக்கு | தினசரி தியானம்
தினசரி தியானம்
மொக்கு தன்னை மறைத்துக்கொண்டிருக்கிறது. பரிபாகம் ஆகாமையே அதற்குக் காரணம். மலரோ தன்னை உலகுக்கு அளிக்கிறது. அது பக்குவத்தின் விளைவு. முகமலர்ச்சியிலான் தன்னை மறைத்துக்கொள்ளட்டும். முகமலர்ச்சியுடையான் உலகுக்குரியவன் ஆகிறான். பின்பு அவன் இறைவனுக்கே தன்னை ஒப்படைத்து விடுகிறான்.
26
செப்டம்பர் 04 | போற்றுமிடம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
கடலினுள்ளே இருக்கும் மீன் ஆனது நீரை நாடி எங்கும் செல்லவேண்டியதில்லை. அதன் உள்ளும் புறமும் நிறைந்திருப்பது நீர். கடவுள் நம் உள்ளத்தினுள் நீக்கமற நிறைந்திருக்கிறார். அவர் சான்னியத்தியத்தை உணர்வதே நல்ல அர்ச்சனையாகும்.
செப்டம்பர் 02 | கிருத யுகம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
நல்ல மனமுடையவர் ஈண்டு இப்பொழுதே கிருதயுகத்தைக் காணலாம். சுயநலத்தை ஒழிப்பது அதற்கு முதல்படி. பொறாமை, பகை, புறங்கூறுதல் ஆகியவைகளைப் புறக்கணிப்பது அடுத்தபடியாகும். உள்ளன்பு ஓங்குதலில் பொற்காலம் என்னும் கிருத யுகம் உதயமாகும்.
1
comment
28
செப்டம்பர் 03 | யோக நித்திரை | தினசரி தியானம்
தினசரி தியானம்
விழித்திருக்கும்போது மனம் வியவகாரமற்றிருக்கவேண்டும். அதனால் பேருணர்வு உறுதி பெறுகிறது. பின்பு, உறக்கத்திலும் அப்பேருணர்வு மறைக்கப்படாதிருக்கிறது. விழிப்புக்கும் உறக்கத்துக்கும் வேற்றுமை அகலும்போது யோக நித்திரை அடையப்பெறுகிறது.
1
comment
29
செப்டம்பர் 01 | பெரியோர் துணை | தினசரி தியானம்
தினசரி தியானம்
ஓநாய்களுக்கிடையில் வளரும் சிறுவன் ஓநாய்போன்று ஆய்விடுவான். துஷ்டர்களுக்கிடையில் வளர்பவன் துஷ்டன் ஆய்விடுவான். சான்றோர்க்கிடையில் வளர்பவன் தானே சான்றோன் ஆய்விடுவான்.
செப்டம்பர் 02 | கிருத யுகம் | தினசரி தியானம்
Loading 1 comment...
-
15:59
ArynneWexler
6 hours agoAll The Reasons You're Right to Fear Zohran Mamdani | NN6
2.32K1 -
LIVE
Side Scrollers Podcast
11 hours ago🔴FIRST EVER RUMBLE SUB-A-THON🔴DAY 4🔴BLABS VS STREET FIGHTER!
922 watching -
LIVE
DLDAfterDark
3 hours agoGlock's Decision - How Could It Impact The Industry?
200 watching -
25:57
The Kevin Trudeau Show Limitless
1 day agoThe Sound Of Control: This Is How They Program You
32.8K8 -
8:29
Colion Noir
13 hours agoThree Masked Idiots Show Up at Her Door — Here’s What Happened Next
46K24 -
15:38
Cash Jordan
8 hours agoPortland Zombies EMPTY 52 Stores… Mayor FREAKS as “Sanctuary” SELF DESTRUCTS
56.1K65 -
1:23:21
Precision Rifle Network
1 day agoS5E4 Guns & Grub - Dustin Coleman of ColeTac
13.3K3 -
1:09:25
Donald Trump Jr.
8 hours agoCorrupt UN Carbon Tax Exposed, Interview with John Konrad | TRIGGERED Ep.285
156K77 -
42:58
TheCrucible
6 hours agoThe Extravaganza! EP: 59 with Guest Co-Host: Rob Noerr (10/23/25)
92.2K7 -
1:40:59
Kim Iversen
8 hours agoTrump Threatens To End ALL Support For Israel
81.8K206