Premium Only Content
This video is only available to Rumble Premium subscribers. Subscribe to
enjoy exclusive content and ad-free viewing.
அக்டோபர் | தினசரி தியானம்
DinasariDhyanam
- 2 / 31
1
அக்டோபர் 31 | செயலும் சாந்தியும் | தினசரி தியானம்
தினசரி தியானம்
ஹிருதயம் ஓயாது அடித்துக் கொண்டிருக் கிறது. அதனால் அது களைப்புறுவதில்லை. உடல் அங்ஙனம் உழைத்துக்கொண்டிருக்கட்டும். மனம் சாந்தியில் நிலைத்திருந்தால் உழைக்கிற உடலுக்கு ஆயாசம் உண்டாகாது. வினையாற்றுதலும் விச்ராந் தியும் சேர்ந்தே நிகழ்கின்றன.
அக்டோபர் 30 | சோம்பல் | தினசரி தியானம்
தினசரி தியானம்
ஆத்ம சாதனத்துக்குப் பேரிடைஞ்சலாயிருப்பது சோம்பல். அதை அகற்ற இயலாதவர்க்கு முன்னேற்றமில்லை. தேவைக்குமேல் உடலுக்கு ஓய்வும். உறக்கமும் கொடுத்தால் அது சோம்பலாகும். இன்று செய்து முடிக்க வேண்டியதை நாளைக்கென்று ஒத்திவைப்பது சோம்பல்.
1
comment
3
அக்டோபர் 29 | ஞானம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
ஜடப்பொருள்களுள் வேற்றுமை காண்பதும் ஜீவர்களுக்கிடையில் வேற்றுமை காண்பதும் அக்ஞானம். அவை யாவும் ஒரே மூலப் பொருளிடத்திருந்து தோற்றத்துக்கு வந்துள்ளன. ஒரு பொருளே பலவாய்த் தோன்றிக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வது ஞானம்.
4
அக்டோபர் 28 | சம்யோகம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
கடலினுக்குப் புறம்பாக அலைக்கு வியக்தியில்லை. கடவுளுக்குப் புறம்பாக மனிதனுக்கு வியக்தியில்லை. கடலைச் சார்ந்திருந்தே அலை தன் வலிவைப் பெறுகிறது. கடவுளைச் சார்ந்திருந்தே மனிதன் தனது ஆற்றலைப் பெறுகிறான். தனக்குரிய யாவையும் கடவுளிடத்திருந்து பெறுவது சம்யோகம்.
5
அக்டோபர் 27 | கிரியை | தினசரி தியானம்
தினசரி தியானம்
வயது வரும்பொழுது ஒவ்வொரு மனிதனும் வினையாற்றத் தகுதியுடையவன் ஆகிறான். அவன் புரியும் கருமம் அவனுக்கு மட்டுமல்லாது உலகுக்கும் நன்கு பயன்படவேண்டும். அத்தகைய கருமத்தைக் கடவுளுக்கென்றே செய்வது கிரியை ஆகிறது.
6
அக்டோபர் 26 | சரியை | தினசரி தியானம்
தினசரி தியானம்
ஒரு குடும்பத்துள் பிறந்து வளரும் குழந்தைக்கு முதலில் வாழ்க்கைமுறை புகட்டப்படுகிறது. பெற்றோர் சொற்படி அது பணிந்து நடக்கவேண்டும். பெற்றோர் ஒழுகுவதைப் பார்த்தும் அது பின்பற்றுகிறது. பழக்கத்தால் நல்ல வாழ்க்கை வாழுதலில் படிந்துவிடுவது சரியை.
7
அக்டோபர் 25 | பரபோதம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
மாறுபடும் இரண்டு எண்ணங்கள் மனத்தில் ஏக காலத்தில் வருவதில்லை. ஓர் எண்ணத்தில் அது ஊறியிருக்கும்போது ஏனைய எண்ணங்கள் அடிபட்டுப் போய்விடுகின்றன. பரபோதம் என்னும் பேரறிவில் எண்ணங்கள் யாவும் அடிபட்டுப் போய்விட்டால் பேரறிவே எஞ்சி நிற்கும்.
8
அக்டோபர் 24 | கடலின் அடிமட்டம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
கடலின் மேற்பகுதியில் அலை வீசுகிறது. மலை போன்று அது உயர எழுகிறது. ஆனால் ஆழமான அடிமட்டத்தில் அது அசையாதிருக்கிறது. மனிதனுடைய மனத்தின் அடிப்பகுதி அங்ஙனம் அசையாதிருக்கவேண்டும். தெய்வ சாந்தி நிலவுதற்கு அந்த அடிப்பகுதியே உற்ற இடமாகும்.
9
அக்டோபர் 23 | முமுக்ஷுத்வம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
தண்ணீருக்குள் அமிழ்த்தி வைக்கப்பட்டிருப்பவனுக்கு வேறு எந்த விதமான நாட்டமும் உண்டாவதில்லை. சுவாசிப்பதற்குக் கொஞ்சம் காற்று கிடைத்தால் போதுமென்று அதன் பொருட்டே அவன் திணறுவான். உயிரைக் காப்பாற்றத் திண்டாடுவது போன்று தெய்வத்தை அடையத் திண்டாடுவது முமுக்ஷுத்வம்.
10
அக்டோபர் 22 | சமாதானம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
சமாதானம் வேண்டுமென்று உலகத்தவர் ஓலமிடுகின்றனர். ஆனால் அவர்கள் உள்ளத்தில் ஓயாது பொங்கியெழுந்து கொண்டிருப்பது போராட்டமும் சஞ்சலமுமேயாம். தான், தனது என்பனவற்றைத் துறந்தார்க்கன்றி நிலைத்த சமாதானம் உண்டாகாது.
11
அக்டோபர் 21 | சிரத்தை | தினசரி தியானம்
தினசரி தியானம்
சிரத்தைக்கேற்றவாறு மனிதன் மேன்மையடைகிறான். தான் மேன்மையடைந்தே ஆகவேண்டுமென்று முதலில் அவன் அதன்மீது சிரத்தை வைத்தாக வேண்டும். தான் அடையும் லஷியமே தனக்கேற்ற பெருநிலையென்று அந்த லக்ஷியத்தின்மீது அடுத்தபடி சிரத்தை காட்டவேண்டும். மூன்றாவதாகத் தான் ஒழுகும் மார்க்கத்தில் சிரத்தை வைக்க வேண்டும்.
12
அக்டோபர் 20 | சகித்தல் | தினசரி தியானம்
தினசரி தியானம்
மண்ணுலகில் பிறப்பெடுத்திருப்பவர்களுக்குத் துன்பத்துக்குமேல் துன்பம் வந்து கொண்டேயிருக்கும். அவைகளைப் பொறுத்துக்கொள்ளுமளவு மனம் உறுதி பெறுகிறது. துன்பத்தில் தளர்வுறுமளவு மனவலிவு குறைகிறது. உறுதியான உள்ளம் படைத்துத் துன்பத்தைப் பொருள்படுத்தாதிருப்பது திதிஷை.
13
அக்டோபர் 19 | உள்ளக் கொதிப்பு | தினசரி தியானம்
தினசரி தியானம்
பொருந்தியவைகளும் பொருந்தாதவைகளுமாகிய எண்ணிறந்த விருத்திகள் மனத்தினுள் உதித்துக்கொண்டே இருக்கின்றன. அவைகளை ஓய்ந்திருக்கப் பண்ணவேண்டும். தோன்றத் தோன்ற அவைகளை ஒதுக்கி வைக்கவும் வேண்டும். திரையற்ற கடல் போன்று மனம் ஆய்விட்டால் அது உபரதியாகும்.
14
அக்டோபர் 18 | தமம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
சுவையை நம்பி மீன் தூண்டிலில் சிக்கிக் கொள்கிறது. கண் கொண்டு தீயில் பற்று வைத்து விட்டில் பூச்சி அதில் வீழ்ந்து மாய்கிறது. ஊறு அல்லது ஸ்பரிசத்தை நம்பி யானை பிடிபடுகிறது. ஓசைக்கு அடிமையாகி மான் பிடிபடுகிறது. மணத்தை நாடி வண்டு மலரில் அகப்படுகிறது. இந்த ஐம்பொறிகளையும் நம்பியோடுகிற மனிதன் கதி என்னாவது? ஐம்பொறிகளை அடக்குவது தமம்.
15
அக்டோபர் 17 | சமம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
தத்தளித்துக் கொண்டிருக்கும் நீரில் மனிதன் தனது பிம்பத்தையோ, ஒரு மரத்தின் பிம்பத்தையோ, சந்திரனது பிம்பத்தையோ சரியாகக் காணமுடியாது. அலைந்துகொண்டிருக்கும் மனத்தில் உண்மை ஒளிர்வதில்லை. சமம் என்பது மனம் அடங்கிய நிலை. ஞானத்துக்கு அது முற்றிலும் அவசியமானது.
16
அக்டோபர் 16 | வியாகூலம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
விடாப்பிடி கொள்வதைச் சிலர் வைராக்கியம் என்று எண்ணுகின்றனர். உண்மை அதுவன்று. ராகம் என்றால் பற்றுதல்; விராகம் அல்லது வைராக்கியம் என்றால் பற்றற்ற நிலை. உலக விஷயங்களில் வைராக்கியம் வந்தால் பகவத் விஷயங்களில் இயல்பாக நாட்டம் உண்டாகும். வைராக்கியம் இல்லாதவனுக்கு ஆத்மசாதனம் இல்லை.
17
அக்டோபர் 15 | வியாகூலம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
பணம் போகம், பதவி, புகழ் ஆகியவைகளைப் பற்றி அல்லும் பகலும் மனிதன் வியாகூலப்படுகிறான். அதிவிரைவில் அவை யாவும் மறைந்து போகக் கூடியவைகள் என்பதை அவன் எண்ணிப் பார்ப்பதில்லை. அதே வியாகூலத்தைக் கடவுளின் பொருட்டு அவன் அடைவானாகில் அது நித்தியானந்தத்துக்கு வழிகாட்டிவிடும்.
18
அக்டோபர் 14 | விவேகம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
நித்தியமாய், மனிதனுக்கு நலன் தருவதாய் இருப்பது எது என்று பாகுபடுத்த வேண்டும். உடலையும் உள்ளத்தையும் பற்றிய யாவும் ஓயாது மாறிக்கொண்டிருக்கின்றன. ஆகையால் அவை நித்தியமானவைகள் அல்ல. அறிவையும் ஆனந்தத்தையும் பற்றியவையே நித்தியமானவை. இதை அறிந்து கொள்ளுதல் விவேகம்.
19
அக்டோபர் 13 | ஓயாத பாடம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
மனிதன் ஆனந்தத்தை நாடுகிறான். ஆனால் நிலையற்ற உலகப் பொருள்களிடத்தில் அவன் அதை நாடி ஏமாற்றமடைகிறான். அடிமேல் அடியடித்து இயற்கைத் தாய் அந்த இன்பம் அழியும் பொருள்களிடத்து இல்லையென்ற பாடத்தைப் புகட்டுகிறாள். ஆனந்தத்துக்கு இருப்பிடம் இறைவன் என்பதை அறிந்துகொள்ளும்வரை அப்பாடம் நடக்கிறது.
20
அக்டோபர் 12 | சிருஷ்டி கர்த்தா | தினசரி தியானம்
தினசரி தியானம்
சிருஷ்டி கர்த்தாவாகிய நான்முகக் கடவுள் இப்பிரபஞ்ச சொரூபமாக இருந்து எண்ணிறந்த புதிய வடிவங்களை எடுத்து வருகிறார். ஆதலால் அந்தந்த உயிர் தன்னைத்தானே புதியதாகச் சிருஷ்டித்துக் கொள்கிறது. மனிதன் தன்னை மேலோனாகச் சிருஷ்டித்துக் கொள்ள முடியும். ஓயாது எண்ணுகிற எண்ணம் அவனை அப்படியமைக்கிறது.
21
அக்டோபர் 11 | நல்ல வாய்ப்பு | தினசரி தியானம்
தினசரி தியானம்
செல்வம், செல்வாக்கு, சுதந்திரம் முதலிய வாய்ப்புக்கள் அமைந்தால்தான் அரும்பெரும் செயல்களைச் செய்ய முடியும் என்று எண்ணுபவன் உண்டு. ஆனால் நல்ல வாய்ப்பு என்பது மனிதனுடைய மனநிலையைப் பொறுத்தது. நல்ல மனமுடையவனுக்கு அமைவதெல்லாம் நல்ல வாய்ப்பேயாம்.
22
அக்டோபர் 10 | தீங்கிழைத்தல் | தினசரி தியானம்
தினசரி தியானம்
மனிதன் ஒருவனுக்குப் பிறர் தீங்கு இழைக்கின்றனர். அத்தீங்கு அவனுக்கு எப்படி வந்ததென்று எண்ணிப் பார்க்கவேண்டும். அவனது மனத்தில் உள்ள தீங்கு புறச்செயலாக வடிவெடுத்து அவனிடம் வந்தது. தீங்கை ஏற்பதற்கான தீய மனமுடையவனுக்கே புறவுலகினின்று தீங்கு விளைகிறது. சான் றோனுக்கு வரும் தீங்கை அவன் தீங்காக ஏற் பதில்லை.
23
அக்டோபர் 09 | சீர்திருத்தம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
எண்ணத்துக்கு ஏற்றவாறு புறவுலகம் காட்சி கொடுக்கிறது. கெட்ட எண்ணமுடையவனுக்குப் புறவுலகில் கேடு மிக நிறைந்திருக்கிறது. எண்ணத்தை ஒழுங்குபடுத்துமளவு கேடு உலகினின்று அகன்று விடுகிறது. சீர்திருத்தம் யாவும் மனத்தில் இருக்கிறது.
24
அக்டோபர் 08 | உனது விருப்பம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
நல்ல வேலைக்காரன் ஒருவன் தன் தலைவனிடம் தன்னை ஒப்படைத்து விடுகிறான். சம்பளம் கேட்பதில்லை. எதைக்கொடுத்தாலும் திருப்தியோடு ஏற்றுக் கொள்கிறான். கொடாவிட்டால் குறை கூறுவதில்லை. அத்தகைய வேலைக்காரன் விஷயத்தில் தலைவனது பொறுப்பு மிகப் பெரியது ஆகிறது. கடவுள் தலைவன், நான் வேலைக்காரன்.
25
அக்டோபர் 07 | நிலைத்த உறவு | தினசரி தியானம்
தினசரி தியானம்
உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துளர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னொருவர் தனது போக்குவரவை மாற்றுவதில்லை. ஆதலால் இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார்.
26
அக்டோபர் 06 | சாரம் கட்டுதல் | தினசரி தியானம்
தினசரி தியானம்
வீடு கட்டுதற்கு முதலில் சாரம் கட்டுகிறோம். சாரம் இல்லாவிட்டால் கட்டடத்தை உயரமாக எழுப்ப முடியாது. ஆனால் கடைசியில் சாரத்தைக் கலைத்தாக வேண்டும். கடவுளை அடைதற்கு உடல் வாழ்வு சாரம். அவரை அடைந்தான பிறகு சரீரம் என்னும் சாரத்தைக் கலைக்கவேண்டும்.
27
அக்டோபர் 05 | யுக்தி | தினசரி தியானம்
தினசரி தியானம்
நிறைகோலானது பொருள்களை உள்ளபடி எடை போடுகிறது. யுக்தி அல்லது மெய்ப்பொருள் விசாரணையை முறையாகச் செய்து கொண்டு போனால் அந்த யுக்தியானது மனிதனைத் தெய்வ சன்னிதானத்துக்கு முன் கொண்டு சேர்க்கும். யுக்தியைப் பயன்படுத்துவதும் ஆத்ம சாதனமேயாம்.
28
அக்டோபர் 04 | தன் கடன் | தினசரி தியானம்
தினசரி தியானம்
உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்புக்கும் அதனதன் கடமையுண்டு. இறைவனுடைய ஆட்சியில் எல்லாவுயிர்களுக்கும் பலதரப்பட்ட கடமைகள் உண்டு. தனக்கு அமைந்துள்ள கடமையை ஒழுங்காகச் செய்வது மானுட வாழ்வின் நோக்கமாகும். கடமையைத் தேவாராதனை போன்று செய்வதே முன்னேற்றத்துக்கு உற்ற உபாயம்.
29
அக்டோபர் 03 | வீண் பேச்சு | தினசரி தியானம்
தினசரி தியானம்
சொல்லால், பார்வையால் அல்லது சைகையால் பிறரை ஏமாற்றி விடாதே. வீண் பேச்சை நச்சுப் பாம்பென விலக்கி விடு. பிறரிடமுள்ள குறைபாடுகளைப் பேசாதே. நலம் தரும் உண்மையையே நவில். அதையும் அளவுடன் பேசு.
30
அக்டோபர் 02 | சன்மார்க்கம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
கடலில் சென்ற கப்பலின் பாய்மரத்தில் பறவையொன்று உட்கார்ந்திருந்தது. ஒரே இடத்தில் எவ்வளவு நேரம் இருப்பது என்று எண்ணிய பறவை புறத்தே பறந்து போனது. எங்குச் சென்றும் உட்காரக் கடலில் இடம் கிடைக்கவில்லை. பழையபடி பாய்மரத்துக்கே வந்துவிட்டது. கடவுள் நமக்கு அப்பாய்மரம் போன்றவர்.
31
அக்டோபர் 01 | சன்மார்க்கம் | தினசரி தியானம்
தினசரி தியானம்
சத்பொருளாகிய பரமனை நோக்கிப் போகும் மார்க்கம் சன்மார்க்கமாம். அம்மார்க்கத்திலே முன் னேற்றமடைந்துவருமளவு மனம் தெளிவடைகிறது. தெளிந்த மனமே தெய்வத்தைத் தெரிந்து கொள்கிறது.
அக்டோபர் 30 | சோம்பல் | தினசரி தியானம்
Loading 1 comment...
-
LIVE
OhHiMark1776
14 hours ago🟢01-18-26 ||||| Halo 'Classic' w/ Brrrap ||||| Halo 3 (2007)
48 watching -
LIVE
The UC Zone
2 hours ago🔴LIVE - THE UC ZONE - BACK ON ARC
33 watching -
LIVE
ttvglamourx
3 hours ago $5.33 earnedPLAYING WITH VIEWERS !DISCORD
166 watching -
LIVE
yungcherokee619
3 hours agoTime To Clap Some Cheeks!!/ Rumble Premium Creator
59 watching -
LIVE
xxTOWERDOGxx🟢Premium Creator🟢
3 hours ago😎Keep Up, I'm Still Winning😎[🪙 RUMBLE WALLET 🪙 !discord
70 watching -
LIVE
RonjnJeremy
4 hours ago $0.84 earnedBattle Brothers, Reforged, Ironman, Part 1 Restart until we get it right, (Sunday Stream)
55 watching -
1:19:06
Mike Krabal
29 days agoBuilding My Best Camper Yet. Start to Finish!
118K39 -
LIVE
Fugglet
2 hours agoTarkov Prestige 5, Main Story Progression!
44 watching -
DVR
nickelsYT
2 hours agoRoblox vibing on geometry dash and others
2.99K -
LIVE
Lofi Girl
3 years agolofi hip hop radio 📚 - beats to relax/study to
137 watching