நவம்பர் 30 | தொண்டன் | தினசரி தியானம்

1 month ago
3

மேடுகளில் இருக்கும் சிற்றாறுகளெல்லாம் பள்ளத்தில் இருக்கும் பேராற்றில் கலக்கின்றன. உயிர்கள் எல்லாம் தொண்டனுக்குச் சொந்தமாய்விடுகின்றன. மற்றவர்களுக்கு அவன் தலைவன் எனினும் தலைச்சுமை போன்று அவன் யாருக்கும் தொந்தரவு கொடுப்பதில்லை. மற்றவர்களுக்கு அவன் முன்நிற்பவன் எனினும் யாருக்கும் இடைஞ்சல் செய்வதில்லை. தொண்டன் யாருக்கும் எதிரியல்லன்.

Loading comments...